img img img img img img img img img img img img img img

செய்திகள் >> கனடா செய்திகள்

மாவீரர் மாதம்...

  
 


மாவீரர் மாதம் ஆகிய கார்த்திகை மாதம் என்பது ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் முதன்மையான ஒரு மாதமாகும். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இளைய இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைத்து நினைத்து வீரவணக்கம் செய்து துயிலும் இல்லங்களை தொழுதும் அவர் தம் ஈகத்தை மதித்து கல்லறைகளின் முன்பு நின்று காந்தால் மலர் வைத்து கண்ணீர் சொரியும் கனத்த மாதம் கார்த்திகை மாதம் ஆகும்.

யார் இந்த மாவீரர்கள்? மாவீரர் நாள் என்றால் என்ன? மாவீரர் நாளை நாம் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? என்ற தெளிவும் புரிதலும் உள்ளவர்களுக்காக எல்லோரும் இருக்க வேண்டும் அல்லவா?

30 ஆண்டுகளாக எம்மை கட்டிக் காத்து நிழலரசு செய்து எம் கண் முன்னால் களமாடி ஒழுக்க சீடர்களாக வென்று வந்தவர்களே அவர்கள் மாவீரர்கள் எமது முற்றத்தில் வாகை சூடி தமிழ் மொழிக்கு ஒரு அரசு வேண்டும் தாயகம் விடிவு பெற வேண்டும் அடுத்த சந்ததி சுதந்திரக் கற்ற சுவாசிக்க வேண்டும் என்று எதிரியோடு போராடி மானசாவை தழுவிக் கொண்டவர்களே அவர்கள் மாவீரர்கள்.  தரையிலும் கடலிலும் வானிலும் ஆண் போராளியாகவும் பெண் போராளியாகவும் உறங்காத கண்மணிகளாகவும் கற்றோடு கற்ற கரைந்துபோனவர்களை அவர்கள் மாவீரர்கள் எமக்கான முகவரியாய் நின்று எமக்காகவே போனவர்களை எம் குல சாமிகள் அவர்கள் மாவீரர்கள்.

இவர்கள் எமது பிள்ளைகள் அல்லவா எம்மை நம்பி தானே போனார்கள் எமக்காக தானே போராடினார்கள் மாவீரர்கள் என்பது ஒரு வார்த்தைக்குள் அடங்கும் ஒரு சொல்லல்ல எதிரியானவனே துரத்தி துரத்தி அடித்த உயிராயுதங்கள். அவர்கள் எதிரியானவன் 2009க்கு பின்னர் 15 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயப்படுகிறான் என்றால் அந்த பயத்தை எதிரிக்கு கொடுத்து பகை வென்ற பாசறைச் செல்வங்கள் அல்லவா அவர்கள். எம் அவரைக் கொண்டு மாவீரர் நாளை குழப்புவதற்காகவும், மாவீரர்களின் இலக்கான தாயக விடுதலை நோக்கிய பயணத்தை சிதைப்பதற்கும் எதிரி எத்தனிக்கின்றான் என்றால் எம்மில் சிலர் உடன் இருந்தே கொல்லும் வியாதியாகி எதிரிக்குத் துணை போகிறார்கள் என்ற வினா இப்போது ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பலமாக எழுந்து நிற்கின்றது.

எமது மண்ணை எதிரியிடமிருந்து மீட்க எமது மக்களை எதிரியிடமிருந்து காக்க எமக்கான பண்பாட்டுப் பாரம்பரியங்களை எதிரியிடமிருந்து காப்பாற்ற எமக்கான இன மொழி வரலாற்றை எமக்கான தனித்துவத்தோடு அடுத்த தலைமுறைக்கு கையளிக்க உன்னதமான தலைவரின் வழிகாட்டுதலில் வழி நடந்த எமது மாவீரர்களுக்கான நாளான மாவீரர் நாள் எவ்வாறு நடைபெற வேண்டும்? யார் நடத்த வேண்டும்? தாங்கள் எங்கே சென்று வணங்க வேண்டும்? என்ற புரிதலும் தெளிவும் மக்களுக்கு இருக்கிறது.

மாவீரர் நாள் என்றால் என்ன? தமிழில் விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப் போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நினைவு நாட்களில் நினைவு கூற இயலாது என்ற நிலையில் அனைவரையும் சமமாக கருதி ஒரே நாளில் நினைவு கூறக்கூடியதாக தமிழில் விடுதலைப் பொருளே முதல் கலைச்சாவடைந்த எமது இயக்க வீரர் லெபரினர் சங்கரின் சத்யநாதன் நினைவு நாளான நவம்பர் 27ஆம் நாள் பொதுவான நாளாக தேர்ந்தெடுத்த எமது தேசிய தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார் இதனை தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமது மாவீரர் நாள் உரையில் குறிப்பிடுகின்றார். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளில் முதலாவது தமிழிலும் மாவீரர் நாளாக உணர்ந்த நிலையில் கடைப்பிடித்தது ஏனைய உலக நாடுகளில் விடுதலைக்குப் பின்னர் உருவான அரசுகளின் ஆளிலேயே விழாக்கள் எடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் தாயகத்தில் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மாவீரர்களுக்கான துயிலும் இல்லங்கள் அமைத்தல், நடு கற்கள் நாட்டப்படுதல் மாவீரர் வாரம் கடைபிடிக்கப்படுதல் மாவீரர்களின் குடும்பங்கள் மதிப்பளி
ப்பு செயப்படுதல் போன்ற மாவீரர்கள் சார்ந்த பல ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை மாவீரர் நாள் ஆனது ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம் வாழும் நாட்டின் சட்ட ஒழுங்குகளுக்கிடையே உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஈழத் தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் கனடிய மண்ணில் கனடியத் தமிழர் நினைவெழிச்சி அகவமானது 2009க்கு பின்னர் தொடர்ச்சியாக மாவீரன் மிகப் பெருந்தொகையான மக்கள் வருகையோடு உணர்வுபூர்வமாக ஆண்டுதோறும் முன்னெடுத்து வருகிறது கடந்த ஆண்டு இன்டர்நேஷனல் சென்டரில் மிகப் பெருந்திரளான மக்கள் வருகையோடு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது இந்த ஆண்டும் இன்டர்நேஷனல் சென்டர் நவம்பர் 27 இல் ஒரே நாளில் மூன்று நிகழ்வுகள் ஆக மாவீரர் நாள் உணவுப் பொருவமாக நடைபெற உள்ளது தாயக கட்டமைப்புகள் மாவீரர் குடும்பத்தினர் செயற்பாட்டாளர்கள் தன்னார்வத் தொண்டர்கள் மொழி ஆர்வலர்கள் கலைஞர்கள் இளையோர்கள் அனைவரதும் முழுமையான ஒருமித்த ஒத்துழைப்போடும் நடைபெற உள்ள மாவீரர் நாளுக்கு மக்கள் அனைவரும் திரண்டு வந்து ஒன்றிணைந்த சக்தியாக நின்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி எழுவோம்.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்

தொடர்பு இலக்கம் 64 76 193619


 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
தளிர் பிரதம ஆசிரியர் சி.சிவமோகன் வரிகளில் உருவான பாடல் இதனை பாடியவர்கள் பிரபல திரைப்பட பாடகர் கரிசு ராகவேந்தர் மற்றும் கனேடிய பாடகி மதுசா தாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.தளிரின் 10 ஆவது ஆண்டின் வெளியீடாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img