img img img img img img img img img img img img img img

செய்திகள் >> இலங்கை செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு மனோ கணேசன் கோரிக்கை...

  
 


அனோசன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு சனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனோசன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர் மோடியின் அவசர கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் அவர் சனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவூதி அரேபிய பிரதமரும் பட்டத்து இளவரசருமான மொஹம்மத் பின் சல்மானுக்கும் இடையில் நெருக்கமான உறவு காணப்படுவதால், அந்த உறவைப் பயன்படுத்தி அனோசனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனவே, சவூதி இளவரசர் மொஹம்மத் பின் சல்மானுடன் தனிப்பட்ட முறையில் பேசி அனோசன் விவகாரத்தில் தலையிடுமாறு மோடியிடம் கோரிக்கை விடுக்குமாறும் அவர் சனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையின் உயரிய விருதான ஸ்ரீலங்கா ரத்னா” விருதை ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் மோடி இலங்கையுடனான தனது நெருக்கமான உறவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். 

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
தளிர் பிரதம ஆசிரியர் சி.சிவமோகன் வரிகளில் உருவான பாடல் இதனை பாடியவர்கள் பிரபல திரைப்பட பாடகர் கரிசு ராகவேந்தர் மற்றும் கனேடிய பாடகி மதுசா தாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.தளிரின் 10 ஆவது ஆண்டின் வெளியீடாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img