img img img img img img img img img img img img img img

செய்திகள் >> உலகச் செய்திகள்

இலங்கை கடலில் இழுவைப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள்..

  
 


இலங்கைக்கு தெற்கே கடலில் மீன்பிடி இழுவைப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட  மீட்பு நடவடிக்கையின் மூலம் இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று (25.06.2026) இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KM Garuda Jaya VI என்ற இந்தோனேசிய கடற்றொழில் இழுவைப் படகில் பயணித்த 25 கடற்றொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து ஆபத்தில் சிக்கியிருந்தனர். இந்தச் சம்பவம் அவுஸ்திரேலியாவின் தேடுதல் மற்றும் மீட்பு பிராந்தியத்திற்குள் இடம்பெற்றதாகவும், அங்கு கடற்றொழிலாளர்கள் ஆபத்தில் இருப்பதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.  இதனையடுத்து, MV Moonstone என்ற வர்த்தகக் கப்பல் நீரில் தத்தளித்த 25 கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியது.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, MRCC கொழும்புடன் ஒருங்கிணைந்து இலங்கை கடற்படை இரண்டு கடற்படை படகுகளை அனுப்பி மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை கரைக்கு அழைத்து வந்தது.

இதன்படி, 25 கடற்றொழிலாளர்களும் நேற்று (24) மாலை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டன.  பின்னர் மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
தளிர் பிரதம ஆசிரியர் சி.சிவமோகன் வரிகளில் உருவான பாடல் இதனை பாடியவர்கள் பிரபல திரைப்பட பாடகர் கரிசு ராகவேந்தர் மற்றும் கனேடிய பாடகி மதுசா தாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.தளிரின் 10 ஆவது ஆண்டின் வெளியீடாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img