img img img img img img img img img img img img img img

செய்திகள் >> கனடா செய்திகள்

இசுகாபுரோ மைய நிலையத்தில் கட்டுமான வேலைகள் ஆரம்பம்

  
 


5.5 பில்லியன் டாலர்களுக்கான முதல் புதிய மூன்று நிலக்கீழ்த் தொடரி வழித்தட நிறுத்தங்களுக்கான விரிவாக்கத் திட்டத்தின்படி ஒன்ராறியோ அரசு அதிகாரப்பூர்வமாக சுகார்பரோ மத்திய நிலையக் கட்டுமானத்தினைத் தொடங்கியுள்ளது, இத்திட்டம் முடிவடைந்தவுடன், வழித்தடம் 2ஆனது 7.8 கிலோமீட்டராக நீட்டிக்கப்பட்டு 105,000 இற்கும் மேற்பட்ட அன்றாட பாவனையாளர்கள் பயன்பெறுவதுடன்,  38,000 பயணிகள் அவர்கள் இருப்பிடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திற்குள் போக்குவரத்தை போக்குவரத்து வசதியை அளிக்கும்.

"இசுகாபுரோ நிலக்கீழ் வழித்தட நீட்டிப்பின் மூலம் பொதுமக்களுக்கும், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் எமது அரசு கனடிய வரலாற்றில் மாபெரும்  போக்குவரத்து விரிவாக்கத்தை அளிப்பது ஒரு திருப்புமுனையாகும்" என அமைச்சர் விசய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.

  இசுகாபுரோ மத்திய நிலையம், போக்குவரத்து நெரிசல் வேளைகளில்  10,000க்கும் மேற்பட்ட பயணிகளையும் 7,000 பயண இடைமாற்ற வசதிகளையும் அளிப்பதுடன், கட்டுமானத்தின்போது ஒவ்வோர் ஆண்டும் 3,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டம் இசுகாபுரோ சமூகம் நீண்ட காலமாகத் தேவைக்கு ஈடுகொடுக்கும் நவீன நம்பகமான போக்குவரத்துச் சேவையை வழங்குவதோடு  ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் மக்களை இணைக்கும்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
தளிர் பிரதம ஆசிரியர் சி.சிவமோகன் வரிகளில் உருவான பாடல் இதனை பாடியவர்கள் பிரபல திரைப்பட பாடகர் கரிசு ராகவேந்தர் மற்றும் கனேடிய பாடகி மதுசா தாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.தளிரின் 10 ஆவது ஆண்டின் வெளியீடாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img