img img img img img img img img img img img img img img

செய்திகள் >> இலங்கை செய்திகள்

திட்டமிடப்பட்ட ரணிலின் கைது நடவடிக்கையால் நள்ளிரவில் சிறைச்சாலை சென்ற அரசியல்வாதிகள்...

  
 


இலங்கையின் முன்னாள் சனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்தியாக உள்ளதுடன் இலங்கை அரசியல்வாதிகள் பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

அந்தவகையில், ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் உத்தரவின் பின்னர் நேற்று இரவு பல அரசியல்வாதிகள் மகசின் சிறைச்சாலைக்கு சென்று  காத்திருந்ததாக தெரியவந்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று இரவு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் நிறைவேற்று சனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் , முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்ட ஆதரவாளர்கள் உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்றிருந்தனர்.  சிறைச்சாலைக்கு சென்ற போதிலும் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை, பின்னர் அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் சனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் சசித் பிரேமதாச இன்று பார்வையிட்டார்.

தாய் என்ற சொல்லில் பகை ஏதும் இல்லை தாய் இன்றி மண்ணில் உயிர் ஏதும் இல்லை கண் கண்ட தெய்வம் உயிர் தந்த அன்னை
தளிர் ஆசிரியர் சிவலிங்கம் சிவமோகன் அவர்களின் வரிகளில் உருவான "தமிழீழத்தின் உயிர் எழுத்து" .. பாடல்: பின்னணி பாடகர் தமிழிசைச் செல்வன் வி.எம்.மகாலிங்கம்
வருகிறாள் தமிழ் மகள் மீண்டும் வருகிறாள்.
பாடல் வரிகள்: தளிர் பிரதம ஆசிரியர் சிவமோகன் பின்னணி பாடகர்: தமிழிசைச்செல்வன் வி.எம்.மகாலிங்கம் பாடகி: கனேடிய முன்னணி பாடகி சுரபி யோகநாதன்
தளிர் பிரதம ஆசிரியர் சி.சிவமோகன் வரிகளில் உருவான பாடல் இதனை பாடியவர்கள் பிரபல திரைப்பட பாடகர் கரிசு ராகவேந்தர் மற்றும் கனேடிய பாடகி மதுசா தாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.தளிரின் 10 ஆவது ஆண்டின் வெளியீடாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
பாடல் : வங்ககடலலையே வாகரை மணல் மேடுகளே.... பாடல் வரி : தளிர் ஆசிரியர் சி.சிவமோகன். இசை : முனைவர் சித்தன் தெ.ஜெயமூர்த்தி BPA.,MA.,Ph.D., பாடகர்கள் : உன்னி கிருசுணன், கனிசா ராசேந்திரகுமார்.
 
img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img img